புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் மாதம் முதல் முழுமையாக பிளாஸ்டிக் தடை செய்யப்படும்..!அமைச்சர் கந்தசாமி
புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் மாதம் முதல் முழுமையாக பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கூறுகையில்,புதுச்சேரி மாநிலத்தில் அக்டோபர் மாதம் முதல் முழுமையாக பிளாஸ்டிக் தடை செய்யப்படும்.பிளாஸ்டிக் தடைக்கான அரசாணை 10 நாட்களில் வெளியிடப்படும். 50 மைக்ரானுக்கு கீழ் பிளாஸ்டிக் பைகள் தயார் செய்த 3 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.