வோடபோன் நிறுவனத்துக்கு ரூ.7,900 கோடி அபராதம்

வரிநிலுவை காரணமாக வோடபோன் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ. 7 ஆயிரத்து 900 கோடி அபராதம்விதித்துள்ளது.ரூ. 16 ஆயிரத்து 430 கோடி வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் பெற்ற ரூ. 16 ஆயிரத்து 430 கோடி மூலதன லாபம் மீதுரூ. 7 ஆயிரத்து 900 கோடி வரி விதித்து அதற்கான நோட்டீஸைவருமான வரித்துறை கடந்த ஜனவரி 25-ஆம் தேதி அனுப்பியது. தற்போது இதே தொகைக்கு அபராதமும் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சிக் ஹட்கின்சன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஹட்கின்சன் வாம்ப்பா நிறுவனத்திடமிருந்து வோடபோன் நிறுவனம் 2007-ம் ஆண்டு 67 சதவிகித பங்குகளை வாங்கியது. இதன் மூலதன லாபம் மீது முந்தைய காலக்கட்டத்தையும் இணைத்து வருமான வரித்துறை வரி விதிப்பு செய்தது.அப்போதே, முந்தைய காலக்கட்டத்தையும் கணக்கிலெடுத்துக் கொண்டு வரிவிதிப்பு செய்வது சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று வோடபோன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் வோடபோன் நிறுவனத்திற்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment