சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் தீண்டாமையின் பிடியில் தமிழக கிராமம்!

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் தீண்டாமையின் பிடியில் தமிழக கிராமம்!

Default Image

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முதல்நிலைப் பேரூராட்சி கிராமமான கீரிப்பட்டியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் கொண்ட கிராமத்தில் பெரும்பான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இதில் இரண்டு வார்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கீரிப்பட்டி கிராமத்தில் தான் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது
கடைவீதி பகுதியில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு சென்ற தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை வேண்டா வெறுப்பாக விரட்டியடிக்கப்படுகிறார்கள்
ஓரிரு கடைகளில் இன்று போய் நாளை வா. அல்லது மாலை வா என தட்டி கழிக்கும் வசனங்கள் மட்டுமே இருந்தது.
MBA.., BE என பட்ட படிப்புகளை படித்துள்ள இந்த கிராம தலித் இளைஞர்கள், நல்ல வேலைக்கு சென்றாலும் சொந்த ஊரில் உள்ள கடைகளில் முடி திருத்தம் செய்ய முடியாது. 15 கிமீ தொலைவில் உள்ள தம்மம்பட்டி அல்லது 20 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூருக்கோ சென்று தான் முடிதிருத்தம் செய்ய முடியும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தினால் அந்த ஊரில் கடை வைத்திருக்க உயர்வகுப்பினர் அனுமதிப்பதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
வெளியூர் சென்று முடி திருத்த முடியாத பலர் தாடியுடனும், தலையில் ஜடா முடியுடனும் இருக்கின்றனர். தங்களுக்குள்ளாகவே மாறி மாறி முடி வெட்டி கொள்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்லும் இளைஞர்களும் விடுமுறை நாட்களில் தங்கள் வீடுகளுக்கு முன்பு சிகை திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
80 வயதான இந்த பெரியவர் ஒரு முறை கூட தன் வாழ்நாளில் சொந்த ஊரில் முடி வெட்டியதில்லை என ஆதங்கத்துடன் கூறுகிறார்.
ஊரின் மையத்தில் இருக்கும் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் இன்றும் தலித் சமூகத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கோயிலுக்குள் நுழைந்து அம்மனை தரிசிக்கவோ, திருநீறு பிரசாதம் பெறவோ முடியாது.
இரட்டை குவளை முறை, கோவில்களில் வழிபாடு செய்ய தடை உயர்வகுப்பினருக்கு முடி வெட்டப்படும் கடைகளில் தாழ்த்தப்பட்டவர்க்கு தடை போன்ற தீண்டாமை செயல்கள் குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் தீர்வு எட்டப்படவில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube