அமெரிக்காவில் பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!

Baltimore Bridge: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரின் கொடியுடன் கூடிய டாலி என்ற கொள்கலன் கொண்ட அந்த சரக்கு கப்பல் 47 ஆண்டுகள் பழமையான பாலத்தின் மீது நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானது. விபத்தின் போது, நீரில் மூழ்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.

சாலை பராமரிப்பு பணியில் 8 பேர் ஈடுபட்டிருந்த நிலையில், இருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, சம்பவம் எதனால்  ஏற்பட்டது என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.