திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் பிஜேபிக்கு தாவல்…பரபரப்பு…!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் பிஜேபிக்கு தாவல்…பரபரப்பு…!

Default Image
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு கட்சி மாறி வாக்களித்த 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டதையடுத்து, அவர்கள் 6 பெரும் பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷாவைச் சந்தித்து,பின்னர் அக்கட்சியில் இணைய உள்ளனர். 
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு கட்சி மாறி ஓட்டுப் போட்டார்கள்.
இதையடுத்து கட்சியின் தலைமையிடம் சொன்னதை செய்யாத அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியை விட்டு நீக்கி மேலிடம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் விக்டர் ஷோம் கூறுகையில், 6 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார்கள பின்னர் முறைப்படி அவர்கள் பா.ஜனதாவில் இணையவுள்ளனர்.
இதனிடையே இந்த  6 எம்எல்ஏக்களும் வரும்  7-ந்தேதி அகர்தலாவில் நடைபெறும் கூட்டத்தில்  இணைப்பு விழாவை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. 
Join our channel google news Youtube