53 வருடங்கள் பின்பு தனுஷ்கோடிக்கு மீண்டும் பேருந்து இயக்கம்… மகிழ்ச்சியில் மக்கள்

53 வருடங்கள் பின்பு தனுஷ்கோடிக்கு மீண்டும் பேருந்து இயக்கம்… மகிழ்ச்சியில் மக்கள்

Default Image
ராமேஸ்வரம்: பெரும் புயலால் உருக்குலைந்து போன தனுஷ்கோடிக்கு 53 ஆண்டுகள் கழித்து பேருந்து விடப்படதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
தனுஷ்கோடியில் கடந்த 1964ஆம் ஆண்டு பெரும் புயலால் மொத்த நகரமும் அழிந்துபோனது. தனுஷ்கோடியில் இருந்த அரசு அலுவலகங்கள், தேவாலயம், தபால் நிலையம், ரயில் நிலையம் மற்றும் பெரிய வியாபார நிறுவனங்கள் புயலுக்கு இரையாகிப் போயின. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். புயலால் ஏற்பட்ட அழிவால் தனுஷ்கோடி நகரத்துக்கு சாலைப் போக்குவத்து முற்றிலும் இல்லாமல் போனது.
ஆனாலும் தனுஷ்கோடி நகரத்தின் மீது சுற்றுலாப் பயனிகளுக்கு ஆர்வம் இருந்தஹ்து. அதனால், ராமேஸ்வரத்திலிருந்து முகுந்தராயர் சத்திரம் வரை சுற்றுலாப்பயணிகள் வாகனத்தில் சென்று வந்தனர். பிறகு தனுஷ்கோடிக்கு கால்நடையாகவே சென்று திரும்பினர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தனுஷ்கோடி வரை அமைக்கபபட்ட சாலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். அதன்பிறகு, மறுநாளில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேரடியாக பேருந்து 53 ஆண்டுகள் கழித்து இயக்கப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு 15 ரூபாய் பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Join our channel google news Youtube