குப்பைகளை கொட்டினால் ரூ. 5000 அபராதம் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

By

கங்கை நதி மாசு படுவதை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம், நதியிலிருந்து 500 மீட்டர் தூரம் வரை குப்பைகளை கொட்ட தடை செய்துள்ளது.

பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசு, உத்திரபிரதேச அரசு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் உள்ள பல சுகாதார நிறுவனக்களுடன் கங்கை நதியை சுத்தம் படுத்தும் திட்டம் கலந்தாலோசித்த பின் தீர்ப்பு வழங்கியுள்ளது
இதன் படி முதற்கட்டமாக கங்கைக் கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு எந்த ஒரு அமைப்பும் இருக்கக் கூடாது என சட்டம் இயற்றியுள்ளது. அது மட்டுமின்றி நதியில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை குப்பை கொட்டுவதையும் தடை செய்துள்ளது.
கங்கை நதியில் குப்பை கொட்டுவதை தடுக்க, குப்பை கொட்டுவோருக்கு ரூ. 50000 அபராதம் என ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
கங்கை நதி கரையில் உள்ள நகரங்களில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலைகளில் நிலத்தடி நீர் எடுக்கவும், கழிவு நீரை சுத்தம் செய்யாமல் வெளியேற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்கும் பொறுப்பை மாநில அரசுகளுக்கு அளித்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கழிவுநீர் சுத்தம் செய்யும் பிளாண்டுகள் அமைக்காத தொழிற்சாலைகள் உரிமம் ரத்து செய்யப்படும். கங்கைக்கரையில் உள்ள அனைத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

Dinasuvadu Media @2023