ஒரு வயது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடாத 5 உணவுகள்….!

  • ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
  • ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 5 உணவுகள்.

பெற்றோர்களை பொருத்தவரையில் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிகமாக முக்கியத்துவம் செலுத்துவது உண்டு. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் ஒரு வயது குழந்தை வரை அவர்களது உணவு பழக்க வழக்கங்களில் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு வயது வரை குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது கவனமாக கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஏனென்றால் எல்லா குழந்தைகளுக்கும் எல்லாவிதமான உணவுகளும் அவர்களது உடலுக்கு ஏற்றதாக இருப்பதில்லை .தற்போது இந்த பதிவில் ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத 5 உணவுகள் பற்றி பார்ப்போம்.

சிட்ரஸ் பழங்கள்

ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி ஆகியவற்றில் அதிக அளவிலான புரோட்டீன் காணப்படுகிறது. இவற்றை நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு எளிதில் செரிமானம் ஆகாது. மேலும் திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களில் அமிலத்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இது குழந்தைகளுக்கு வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இப்படிப்பட்ட பழங்களை கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

சில காய்கறிகள்

கீரைகள், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது அல்ல. இது சத்துக்கள் நிறைந்ததாக இருப்பினும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது குழந்தைகளின் உடலில் சில உபாதைகள் ஏற்படுத்தக் கூடும்.

உப்பு

குழந்தைகளின் உடலை பொருத்தவரையில், ஒரு நாளைக்கு ஒரு கிராம் உப்பு என்பது மிகவும் போதுமானதாகும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலிலேயே தேவையான அளவு உப்பு கிடைக்கிறது. எனவே உப்பு கலந்த எந்த ஒரு பொருளையும் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். இது குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.

இனிப்புவகை

குழந்தைகளுக்கு சாக்லெட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் சாக்லேட்டில் கஃபின் அதிகமாக காணப்படுகிறது. இது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய ஒன்று. எனவே அதிகமாக சாக்லெட் கொடுப்பது ஒரு வயது வரையில் குறைப்பது நல்லது.

பாப்கார்ன்

பாப்கார்ன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஆனால் இந்த பாப்கானை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. இது சில சமயங்களில் குடல்களில் ஒட்டிக் கொள்வதற்கும், வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பாப்கார்னை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.