தமிழ்நாட்டில் 44,800 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா – சத்ய பிரதா சாகு தகவல்.!

Election 2024: தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது என தேர்தல் அதிகாரி கூறிஉள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1, 297 கோடி மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே மிகவும் அமைதியாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதிலும், சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். சிறையில் உள்ளவர்கள் சிறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தபால் வாக்கு அளிக்கலாம்.

மேலும், அலுவலகத்தில் வேலை செய்யும் பிணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் அனைவரும் நாளை மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை வாக்கு அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.