விகாஸ் துபே போலீசார் மீது நடத்திய தாக்குதலில் 4 போலீசார் காயம்.!

காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகவும், இதனால்,  விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மத்திய பிரதேச உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்ட  விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு திரும்ப அழைத்து வரப்பட்டபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த என்கவுண்டர் சம்பவத்தில் நான்கு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, கான்பூர் எஸ்.பி கூறுகையில், காவல்துறையினர் ரவுடி விகாஸ் துபேவை கான்பூருக்கு அழைத்து வந்த  ஒரு கார் திடீரென  கவிழ்ந்து விபத்து நடந்தது. இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்பி ஓட முயன்றார். அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனால், போலீசார் சுட்டனர், இந்த சம்பவத்தில் காயமடைந்த ரவுடி விகாஸ் துபேவை  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.   விகாஸ் துபே  நடத்திய துப்பாக்கி சூட்டில்  4 போலீசார்  காயமடைந்தனர் என அவர் தெரிவித்தார்.

author avatar
murugan