வரலாற்றில் இன்று அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மதம் மாறினார்


வரலாற்றில் இன்று – இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி டாக்டர் அண்ணல் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்– 1956, அக்டோபர், 14ம் நாள்
கோயிலுக்கு நுழைவதற்குக் கூட அனுமதிக்காத இந்து மதத்தில் தலித்துகள் இனியும் இருக்கவேண்டியதில்லை எனக் கருதினார் அம்பேத்கர். அதே வேளையில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருந்த தலித் மக்கள் முன்னேற அவர்களுக்கு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிகவும் அவசியம் எனக்கருதினார். இந்து மதத்திலிருந்து வெளியேறினாலும் தலித் மக்கள் மதமற்றவர்களாக இருப்பது கூடாது என அவர் கருதினார். இசுலாம், கிறித்தவம் போன்ற வெளி நாடுகளிலிருந்து வந்த மதங்களை தவிர்த்து இந்திய மண்ணுக்குரிய மதமான பௌத்த மதத்திற்குத் தனது ஆதரவாளர்களோடு அம்பேத்கர் மதம் மாறினார். அரசியல் சட்ட அமைப்பு 25-ன் விதிப்படி புத்தமதம் இந்து மதத்தின் உட்பிரிவாகவே நிர்ணயிக்கப் பட்டிருப்பதால் தலித்துக்கள் புத்தமதத்துக்கு மாறினாலும் அவர்கள் போராடிப் பெற்ற அரசியல் சட்டப்படியான உரிமைகளும் சலுகைகளும் பறிபோகாமல் நீடிக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *