60 நிமிடத்தில் 33 வகையான உணவுகள் தயார்! சமையல் மீதான காதலால் சாதனை படைத்த 10 வயது சிறுமி!

60 நிமிடத்தில் 33 வகையான உணவுகள் தயார்! சமையல் மீதான காதலால் சாதனை படைத்த 10 வயது சிறுமி!

Default Image

33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்த 10 வயது சிறுமி.

சமையல் என்பது சிலர் கடமைக்கு செய்வார்கள், சிலர் ரசித்து செய்வர். அந்த வகையில், எர்ணாகுளத்தை சேர்ந்த விமானப்படை விங் கமாண்டர் பிரஜித் பாபுவின் மகள், சன்வி பிரஜித் என்ற 10 வயது சிறுமி, இட்லி, ஊத்தப்பம், ப்ரைடு ரைஸ், காளான் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் நூடில்ஸ், உள்ளிட்ட 33 வகையான உணவுகளை 60 நிமிடத்தில் சமைத்துள்ளார்.

சமையல் மீது கொண்ட காதல், சிறுமி சன்வியை சாதனை சிறுமியாக மாற்றியுள்ளது. 60 நிமிடத்தில் 33 வகையான உணவுகளை செய்து சாதனை படைத்துள்ள இந்த சிறுமி, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 10 வயதே ஆன இந்த சிறுமி யூடியூபில் சமையல் கலையையும் கற்றுக் கொடுக்கிறார். இவரது தாயார் ஒரு சமையல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய சாதனை குறித்து சிறுமி கூறுகையில், தனது தாயாரின் சமையலில் ஈர்க்கப்பட்டு தான் இந்த சாதனை செய்ததாகவும், இந்த சாதனையை தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube