தமிழகத்தில் எய்ம்ஸ்: மத்திய அரசுக்கு உச்சநிதிமன்றம் டிச.,31 வரை கால கெடு!

தமிழகத்தில் எய்ம்ஸ்: மத்திய அரசுக்கு உச்சநிதிமன்றம் டிச.,31 வரை கால கெடு!

Default Image

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய உள்ளது என்பது பற்றி வரும் 2018 ஜனவரி 1ம் தேதி தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்தும், எங்கு அமைய உள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனக்கோரியும் மதுரை ஐகோர்ட் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன் இன்று (ஆகஸ்ட் 2) காலை விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எய்ம்ஸ் அமைக்கும் இடம் குறித்து தேர்வு செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். கேள்வி: இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்து அறிவிக்க இன்னும் எத்தனை நாள் ஆகும். எந்த இடத்தில் அமைய உள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் கேட்டு பிற்பகலுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். பதில்: தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். உத்தரவு: அப்போது நீதிபதிகள் கூறுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த இடத்தை துணைக்குழு தேர்வு செய்து 2 மாதத்தில் மத்திய குழுவுக்கு அளிக்க வேண்டும்.
இக்குழு டிசம்பர் 31ம் தேதிக்குள் எய்ம்ஸ் அமையும் இடத்தை தேர்வு செய்து ஜனவரி 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து ஐகோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Join our channel google news Youtube