5 நாட்கள் சடலங்களுடன் இருந்த 3 வயது சிறுவன்…! உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட போலீசார்…!

5 நாட்கள் சடலங்களுடன் இருந்த 3 வயது சிறுவன்…! உயிருக்கு போராடிய சிறுவனை மீட்ட போலீசார்…!

5 நாட்கள் சடலங்களுடன் இருந்த 3 வயது சிறுவனை மீட்ட போலீசார். 

பெங்களூரில் பேட்டரக்கள்ளி, திகிலரபாளையாவை சேர்ந்த சங்கர் என்பவர், தனியார் பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மிகவும் பிரமாண்டமான வீட்டில், மனைவி, மகன், மகள்கள் மாறும் அவர்களது குழந்தைகளுடன் வசித்து வந்த்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பதாக வெளியூர் சென்ற சங்கர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, 5 நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில், துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சங்கரின் மனைவி பாரதி, மகள்கள் சித்தனா,பூரணி, மகன் மதுசாகர, ஒன்பது மாத கைக்குழந்தை என 5 பேர் இறந்துகிடந்துள்ளனர். அந்த சடலங்களுக்கு அருகில் 3 வயது சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்த போலீசார், உடனடியாக சிறுவனை மீட்டு தண்ணீர், உணவு கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலைக்கு காரணம், குடும்ப பிரச்சனையா?, கடன் தொல்லையா? அல்லது வேறு எதுவும் மிரட்டல் இருந்ததா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், பத்திரிக்கை ஆசிரியர் எங்கு சென்றார்? மகள்களின் கணவர் எங்கே என்றும் விசாரித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube