ஆரோக்கியமான முறையில் விரைவில் உடல் எடையை குறைப்பதற்கான 3 வழிகள்…!

தற்போதைய காலகட்டத்தில் வயதானவர்களே கட்டுக்கோப்பான உடலமைப்புடன் வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சிகள்  செய்கின்றனர். ஆனால், இதை செய்தால் மட்டும் போதாது. அதேபோல உணவு முறைகளில்  மட்டும் கட்டுப்பாடாக இருந்தாலும் சரியாகாது. முறையான நேரங்களில் முறையான உணவுகள் எடுத்துக் கொள்வதும், முறையான நேரங்களில் தூங்குவதும் நிச்சயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு உதவும்.

இன்று நாம் எப்படி ஆரோக்கியமான மூன்று முறையில் விரைவில் உடல் எடையை குறைப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த முறைகளில் நீங்கள் உடல் எடையை குறைக்கும் பொழுது இதன் மூலமாக உங்கள் பசி குறைவதுடன், வேகமாக எடை இழப்பு ஏற்படும் மேலும் உடலில் வளர்சிதை மாற்றங்கள் மேம்படவும் இது உதவும்.

உடல் எடை குறைய

உங்கள் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கான முதல் வழி சர்க்கரைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை குறைப்பதன் மூலம் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும். முழு தானியங்களாக சாப்பிடுவதன் மூலமாகவும் நாம் விரைவில் உடல் எடையைக் குறைப்பதுடன், நமது பசியும் குறையும்.

இரண்டாவதாக புரதம், கொழுப்பு மற்றும் காய்கறி ஆகியவற்றை சரியாக உட்கொள்ளும் பொழுது நாம் உடல் எடையை குறைக்க முடியும். அதாவது காய்கறிகள் மற்றும் தானியங்களில் மூலமாக கிடைக்கக் கூடிய கார்போஹைட்ரேட்டுகளை நாம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் புரத உணவை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சராசரி ஆணுக்கு 46-75 கிராம் புரதம் நாளொன்றுக்கு போதுமானது. பெண்ணுக்கு 35-65 கிராம் புரதம் போதுமானது.

குறிப்பாக மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி சால்மன் மீன் மற்றும் இறால் மீன், முட்டை ஆகியவை ஆரோக்கியமான புரதம் நிறைந்த உணவுகள். மேலும் காய்கறிகளில் தக்காளி, கீரை வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ் ஆகியவையும் சாப்பிட தகுந்தது. மூன்றாவதாக உணவு மட்டுமல்லாமல் நமது உடலை உடற்பயிற்சிக்கு ஏதுவாக மாற்றுவதும் நமது உடல் எடையை விரைவில் குறைப்பதற்கு வழியாக அமையும்.

உடற்பயிற்சியின் மூலமாக மட்டும் உடல் எடை குறைந்து விடப் போவதில்லை. இருப்பினும் நாம் முன்னமே சொன்னதுபோல அளவுடன் புரதம், அளவான கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணுதல் நமக்கு உடல் எடை குறைக்க அதிகம் உதவும். அதனுடன், மேலும் அடிக்கடி ஜிம்முக்கு செல்வது அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதும் நமது உடல் எடையை குறைப்பதற்கு ஒரு நல்ல வகையாக அமையும்.

author avatar
Rebekal