வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 3 வேளை உணவு…! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்…..!

m.subramaniyan

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும், மே-24ம் தேதி முதல் 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வீட்டில்  தனிப்படுத்திக் கொண்டவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.