ஒரே ஆண்டில் தேர்வு செய்த 2 ஒலிம்பிக் போட்டிகள் ;ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு..!

ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்தது. அடுத்ததாக, 2020ம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடக்கிறது. போட்டியை நடத்தும் நாடு 7 ஆண்டுகளுக்கு முன்பாக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படும். அதன்படி, 2024 மற்றும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் நாடுகளை தேர்வு செய்வதற்கான சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் பெரு நாட்டின் லிமாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, 2 ஒலிம்பிக் போட்டிகளை ஒரே ஆண்டில் தேர்வு செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment