ஜனாதிபதி தேர்தல் :2,74,991 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னிலை..!

ஜனாதிபதி தேர்தல் :2,74,991 வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் முன்னிலை..!

Default Image
புது தில்லி: இரண்டு மடங்கு அதிக வாக்குகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநயாகக் கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 4,79,585 வாக்குகளும், காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்ட மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமார் 2,04,594 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
எனவே, ராம்நாத் கோவிந்த தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மீராகுமாரை விட, இரண்டு மடங்கு, அதாவது 2,74,991 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படகிறது.
குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் முடிவுகள் மாலை 5 மணிக்கு முன்னதாக வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ராம்நாத் கோவிந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
முதலாவதாக, நாடாளுமன்ற இல்லத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதிலிருக்கும் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு, பல்வேறு மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் இருக்கும் வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்குகள் 4 தனித்தனி மேஜைகளில் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன. சுமார் 8 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பிகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலுக்காக, நாடாளுமன்ற இல்லத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர்த்து, பல்வேறு மாநிலங்களில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்தலில், 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
Join our channel google news Youtube