25% நிறைவு பெற்ற ககன்யான் திட்டம் -நிறுத்தப்பட்ட பயிற்சி

இந்தியா 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு  4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும்  உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி இந்திய நிறுவனமான  இஸ்ரோ ,ரஷ்யாவின் Glavkosmos நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிலையில் இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக  தெரிவித்துள்ளது.மேலும்  ரஷ்யாவில் கொரோனா தடுப்பு  நடைமுறை இந்திய விண்வெளி வீரர்களுக்கு உறுதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் , இவர்களுக்கான  அடுத்த கட்டப் பயிற்சிகள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.