ஆஸி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா வெல்ல 243 ரன்கள் இலக்கு

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா வெல்ல 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகளில் இந்திய அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன.
தொடரை வென்றதால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இந்திய அணி. ஆனால் கடந்த போட்டியில் தோற்றதால் 2-வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது.
இந்நிலையில் நாக்பூரில் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சீராக ரன்களைக் குவித்து வந்தது.
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 242 ரன்கள் குவித்தது. இந்தியா வெல்ல 243 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இந்திய அணி அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment