பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஒரு இந்து அமைச்சர்…!

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக ஒரு இந்து அமைச்சர்…!

Default Image

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவியிழந்தார். இதன்பிறகு, நேற்று பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஷாகித்கான் அப்பாஸி புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், அமைச்சரவையில் தர்ஷன் லால் என்கிற மருத்துவர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மதத்தால் ஒரு இந்து ஆவார். இதன்மூலம், பாகிஸ்தான் அமைச்சரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவர் இடம்பெற்றுள்ளார்.

தர்ஷன் லால் நான்கு மாகாணங்களுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இவர் சிந்து பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube