முதல்வர் ஆலோசனை !மழை பாதிப்புகள் குறித்து தொடங்கியது ….
மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் ஆலோசனை.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபும் மற்றும் திருவாருர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலத்தின் அதிகாரிகள், வடகிழக்கு பருவமழைக்காக நியமிக்கப்பட்ட 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட உயர் காவல் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.