சென்னையில் கொரோனா பாதிப்பிலிருந்து 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 20 பேர் வீடு திரும்பினர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது 210-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றினால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று தமிழகத்திலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த, 20 பேர் இப்பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் கூறுகையில், பிரதமர், முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, செவிலியர்கள் தங்களை தாய் போல கவனித்ததாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.