இந்தியாவில் கொரோனாவிலிருந்து 20.96 லட்சம் பேர் குணமடைந்தனர்!

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 20.96 லட்சம் பேர் குணமடைந்தனர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமேரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில உள்ளது.

இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில், 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 28,36,926-ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 977 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 58,794 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தோர்எண்ணிக்கை 20.96 ஆக அதிகரித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.