வரும் 20ஆம் தேதியில் திருச்சியில் ரஜினி ரசிகர்களுக்கு மாநாடு….

By

திருச்சியில் வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ள காந்திய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில், ரஜினி ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினி தரப்பில் இருந்து உத்திரவிடபட்டுள்ளது,இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனை ரஜினியின் அரசியல் பிரவேசமாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.
காந்திய மக்கள் இயக்க மாநாடு திருச்சியில் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காந்திய மக்கள் இயக்கத்தின்  தலைவர் தமிழருவி மணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது, ரசிகர்களிடையே பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து இலைமறைகாயாக வெளிப்படுத்தி இருந்தார். நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் அறைகூவல் விடுத்தனர். 
இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறியிருந்தார். இதற்கு ரஜினி தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், நடிகர் கமல் ஹாசன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 
இந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத்தின் மாநாடு திருச்சியில் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ரஜினி ரசிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளமாறு ரஜினி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அழைப்பை ரஜினி அரசியல் பிரவேசமாகவே ரஜினி ரசிகர்கள் கருதுகின்றனர்.

Dinasuvadu Media @2023