தமிழகதின் 20வது கவர்னராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்….!

சென்னை : தமிழகத்தின் 20வது கவர்னரான பன்வாரிலால் புரோஹித் இன்று(அக்.,6) பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் காலை 9.30 மணியளவில் நடந்த விழாவில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் மாளிகையில் உள்ள கார்டனில் மேடை அமைக்கப்பட்டு, பதவியேற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி, அன்பழகன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். பா.ஜ., எம்.பி.,க்கள் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன்,வானதி ஸ்ரீனிவாசன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாட்டு தூதரக அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கவர்னர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.டிஜிபி ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Comment