பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி மேலும் 2 வழக்கு!

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணை மீது நாளை நடைபெற உள்ள நிலையில், மேலும் 2 வழக்குகள்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் 2 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் அவசர முறையீடு செய்திருந்தார். அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி நிலையில், நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு ஓபிஎஸ் தரப்பு மனு விசாரணை வரும் நிலையில் மேலும் 2 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதால், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு சட்ட சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment