கும்கி 2 படத்தில் அதிதி..!!

கும்கி 2 படத்தில் அதிதி..!!

Default Image
இயக்குநர் பிரபு சாலமன் அடுத்து ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.இப்படத்திற்கான நடிகர் நடிகைகளின் பரிசீலணை நடைபெற்றபோது, கும்கியில் நடித்த விக்ரம் பிரபு – லட்சுமி மேனனை மீண்டும் நடிக்க வைக்க திட்டமிட்டார்.
அவர்கள் கேட்ட சம்பளம் தன்னுடைய படத்தின் பட்ஜெட்டுக்கு செட்டாகவில்லை என்பதால் தற்போது புதுமுகங்களை வைத்து எடுக்க உள்ளார்.
இப்படத்தின் கதாநாயகி வேடத்துக்கு முதலில், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியரின் மகளை செலக்ட் செய்தார்.
இந்த விஷயத்தை அவர் ஆர்வக்கோளாறில் மீடியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
அதனால் கடுப்பபான பிரபுசாலமன், அவரை படத்திலிருந்து நீக்கினார்.
தற்போது, இப்படத்தின் கதாநாயகியாக ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அதிதியை ஒப்பந்தம் செய்துள்ளார். இவர் இளம் ஹீரோ ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளவிருக்கும்நிலையில் பிரபுசாலமனின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவருக்கு இணையாக, கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் யார் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை!
விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்திற்கு ’கும்கி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இமானுக்கு பதில் நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
Join our channel google news Youtube