தளபதி-2வில் விஜயும் விக்ரமும்..,தேவர்மகன்-2வில் கமலும் அஜித்தும்…நடித்தால் எப்படி இருக்குமென இணையதளவாசிகள் கணிப்பு…!

By

கடந்த காலங்களில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களை ரிமேக் செய்வது சமீபத்தில் தமிழில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கணித்த இணையதளவாசிகள்

இந்நிலையில், முன்பு மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், அவற்றில் குறிப்பிட்ட சில நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் கோடம்பாக்கத்தினர் சிலர் முணுமுணுக்கிறார்கள். இன்னும் சிலர் அதை உறுதி செய்வதைப்போல இணையதளங்களில் செய்திகளை உலவ விடுகின்றனர். அப்படி ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படும் படங்களையும் அப்படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நடிகர்களையும் பற்றிய பட்டியல் இதோ..

ரஜினி நடித்த பில்லா படத்தைத் தொடர்ந்து அஜித் பில்லா-1 மற்றும் பில்லா-2 படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் பில்லா-3 படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கமல் இயக்கி நடித்த படம் குருதிப்புனல். இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடித்த கேரக்டரில் சூர்யாவும், அர்ஜூன் நடித்த கேரக்டரில் மாதவனும் நடிக்க இருப்பதாக இணையதளவாசிகள் இம்சித்து வருகிறார்கள்.

ரஜினி நடித்த அண்ணாமலை படத்தின் அடுத்த பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் தட்டுகிறார்கள். கமல் நடித்த அபூர்வராகங்கள் இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக குலவையிடுகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 2.0 இந்தப்படத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார் நடித்து வருகின்றனர். ஆனால் இப்படம் வெளியாகும் முன்பே இப்படத்தின் அடுத்த பாகமாக 3.0 எடுக்கப்பட உள்ளாதாகவும், அதில், ரஜினி நடித்த கேரக்டரில் விஜயும், அக்‌ஷய்குமார் கேரக்டரில் விக்ரமும் நடிக்க இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரே டாக்!

தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசனும், கமலும் நடித்திருந்தனர். இப்போது தேவர் மகன் பார்ட்-2 படம் உருவாக இருப்பதாகவும் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நடித்த கேரக்டரில் கமலும், கமல் நடித்த கேரக்டரில் அஜித்தும் நடிக்க இருப்பதாகக் குழலூதுகிறார்கள். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த படம் முதல்வன். இந்தப்படத்தின் அடுத்த பாகத்தில் விஜய் ஒருநாள் முதல்வராகக்கூடும் என இணையதளவாசிகள் கும்மியடிக்கிறார்கள்.

விஜய் நடித்த படம் துப்பாக்கி. இப்படத்தின் அடுத்த பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் காதுகடிக்கிறார்கள். மம்முட்டி, ரஜினி நடித்த படம் தளபதி. இப்படத்தின் அடுத்த பாகத்தில் ரஜினி கேரக்டரில் விஜயும், மம்முட்டி கேரக்டரில் விக்ரமும் நடிக்க இருப்பதாக வரும் தகவல்கள்தான் டாப்கியரில் தடதடக்கின்றன. இந்தச் செய்திகள் உண்மையானால் தமிழ் சினிமாவுக்கு சுக்ர திசைதான்!

Dinasuvadu Media @2023