தூத்துக்குடியில் பரபரப்பு…ரூ.19 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டன..!

By

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தூத்துக்குடி வடபாக போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த இருசக்கர வாகத்தை மறைத்தபோது போலீசாரிடம் முன்னுக்கு முரணாக பதில் தெரிவித்த அவர்கள் கையில் வைத்திருந்த பையை மறைத்தனர். இதைபார்த்த போலீசார் பையை வாங்கி சோதனை செய்தபோது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை பார்த்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் பிடித்து தூத்துக்குடி வடபாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர். இதில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையாயூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ் , செந்தாமரை கண்ணன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரனையில் கோவில்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் கமிசன் தொகைக்கு பழைய நோட்டுகளை மாற்றி தருவதாக தெரிவித்ததால் பணத்தை கொண்டு வந்ததாக முதற்கட்ட விசாரனையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 18 லட்சத்து 60ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்த போலீசார் பணத்தை கொடுத்து அனுப்பிய பாவூர்சந்தரத்தை சேர்ந்த ராஜ், ராமர், வைத்தியலிங்க ராஜா, மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர் சங்கர் ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் பழைய 500, 1000 நோட்டுகள் பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​

Dinasuvadu Media @2023