தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து, மொத்தம் இதுவரை 635 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 178 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 48, கோவையில் 31, சென்னை ஸ்டான்லியில் 26 பேர் என மொத்தம் 178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டன. இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,596 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 358 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தென்காசி 5, விழுப்புரம் 4, செங்கல்பட்டு, தஞ்சையில் தலா 3, கள்ளக்குறிச்சி 2, காஞ்சிபுரம், தூத்துக்குடி மற்றும் கோவையில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்