இலங்கை அணி:154/5 ரன் எடுத்து தடுமாற்றம்!

இலங்கை அணி:154/5 ரன் எடுத்து தடுமாற்றம்!

Default Image
முதல் டெஸ்டில் இரண்டாம் நாளான இன்று  இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறுகிறது. 

ரகானே மற்றும் ஹர்திக் பாண்ட்யா அரை சதம்

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. புஜாரா 153 ரன்கள் எடுத்தார். ரகானே (57) அரை சதம் கடந்தார். ஹெராத் ‘சுழலில்’ சகா (16) சிக்கினார். அஷ்வின் 47 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 15, ஷமி 30 ரன்களில் ‘பெவிலியன்’ திரும்பினர். அறிமுக டெஸ்டில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக நுவன் பிரதீப் 6 விக்கெட் வீழ்த்தினார். 

ஷமி அபாரம்:


பின், களமிறங்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னே (2) ஏமாற்றினார். ஷமி ‘வேகத்தில்’ குணதிலகா (16), குசல் மெண்டிஸ் (0) ஆட்டமிழந்தனர். தரங்கா (64) அரை சதம் அடித்தார். டிக்வெல்லா (8) சொதப்பினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்து, 446 ரன்கள் பின்தங்கி இருந்தது. மாத்யூஸ் (54), தில்ருவன் பெரேரா (6) அவுட்டாகாமல் இருந்தனர். 
Join our channel google news Youtube