புதுப்பேட்டை வெளியாகி 15 ஆண்டுகள் – “பயணம் தொடரும்” செல்வராகவன் ட்வீட்.!!

செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் போஸ்டரை  வெளியிட்டு “பயணம் தொடரும்” என்று ட்வீட் செய்துள்ளார். 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006ஆம் ஆண்டு  வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகும். இந்த படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சிறந்த கேங் ஸ்டார் திரைப்படமாக உருவாகி வெளியான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில், புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 வருடங்கள் ஆனதால் தனுஷ் ரசிகர்கள் #15YearsOfPudhupettai என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் போஸ்டர் வெளியிட்டு “பயணம் தொடரும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.