இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேருக்கு தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 1,97,894 பேர் டிஸ்சார்ஜ்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,380ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,86,94,879 ஆக அதிகரித்துள்ளது.

  • கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,20,529 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.
  • கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,86,94,879 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் இறப்பு எண்ணிக்கை 3,380 ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,44,082  பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,97,894 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
  • இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,67,95,549 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,55,248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 22,78,60,317 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.