ரூ.11.5 கோடிக்கு ஏலம் போன அதிசய ‘நிலவு’ பை!

விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் பயன்படுத்திய பை ரூ.11.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் நாசா அமைப்பு கடந்த 1969-ஆம் ஆண்டு ‘அப்பல்லோ 11’ விண்வெளி பயண திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்தத் திட்டத்தின் கீழ் நிலாவுக்கு சென்ற விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் முதல் முதலாக காலடி எடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்தார். அப்போது, அவர் எடுத்துச் சென்ற ஒரு பையை பயன்படுத்தி, நிலாவில் ஐந்து பல்வேறு இடங்களில் இருந்து 500 கிராம் எடை கொண்ட மண் மற்றும் 12 பாறைக் கற்களை பூமிக்கு சோதனைக்காக எடுத்து வந்தார். 
 இன்னும், அந்தப் பையில் நிலாவின் தூசு துகள் ஒட்டியிருப்பது அதன் தனிச்சிறப்பாக அமைந்தது.

author avatar
Castro Murugan

Leave a Comment