112வது நாட்களாக தொடரும் நெடுவாசல் மக்களின் போராட்டம்…!

ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12ம் தேதி துவக்கினர். நேற்று பெண்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து மண்ணில் ஊற்றினர். அதில் விவசாயிகள் ஏர்பூட்டி உழவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 112வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.  திரளான விவசாயிகள், பெண்கள் கலந்துகொண்டனர். மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகத்தை் கண்டித்து கோஷமிட்டனர்.

அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், நிலத்தடி நீர் மாசடைந்து விளைநிலங்கள் மலட்டுத்தன்மை அடையும். தமிழக அரசு இத்திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை உடனடியாக கூட்டி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய விவசாயத்தை காப்பாற்ற எவ்வளவு பெரிய போராட்டத்தையும் நடத்த தயாராக உள்ளோம்’ என்றனர். 

மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் ஒப்பந்தத்தை முதன்முதலில் கையொப்பமிட்டது திமுக மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்கள் தான்…

author avatar
Castro Murugan

Leave a Comment