வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள்.

வரலாற்றில் இன்று நவம்பர் 11ம் நாள் முதலாம் உலகப் போர் முடிவுற்ற நாள். 1914ம் ஆண்டு துவங்கிய இப்போர் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது.
உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன்மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்டஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
ஜெர்மானியப் படைகளின் சரணாகதியை அடுத்து நேச நாடுகளுக்கும் மைய நாடுகளுக்கும் இடையில் 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி உருவான உடன்படிக்கையின்படி இப்போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது

Leave a Comment