31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

#IPL1000: ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டி..! மும்பையுடன் மோதுகிறது RR..!

ஐபிஎல் 2023 தொடரின் 1000-வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 விரைவில் அதன் 1000-வது போட்டியை எட்டவுள்ளது.

ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல்-ல் மொத்தம் 958 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் 41 மற்றும் 42-வது போட்டியில், 42-வது போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டியாகும். இது ஐபிஎல்-ன் பிரமிக்க வைக்கும் சாதனையாகும். .

இந்த 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிசிசிஐ ஒரு சிறிய கொண்டாட்டத்தை நடத்தும். இந்த நிகழ்வு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைபெறும்.