லெக்கிங்ஸ், குட்டை பாவாடை போன்ற ஆடைகளை அணியக்கூடாது…அணிந்தால் 1000 டாலர் அபராதம் ..!

லெக்கிங்ஸ், குட்டை பாவாடை போன்ற ஆடைகளை அணியக்கூடாது…அணிந்தால் 1000 டாலர் அபராதம் ..!

Default Image

கோல்ஃப் விளையாடும் பெண்கள் லெக்கிங்ஸ், குட்டை பாவாடை போன்ற ஆடைகளை அணியக்கூடாது என்றும் மீறி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கோல்ஃப் விளையாடும் வீராங்கனைகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

பணக்கார விளையாட்டுக்களாக கோல்ஃப் விளையாடும்போது வீராங்கனைகள் முகம் சுழிக்க வைக்கும் ஆடை அணிவதாக புகார்கள் எழுந்தன. இந்த விளையாட்டின்போது அடிக்கடி பெண்கள் குனியவும், உட்காரும் நிலையிலும் இருக்க வேண்டியுள்ளதால் அவர்கள் அணியும் உடைகளால் ஆபாசம் தோன்றுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பெண்களுக்கான தொழில்முறை கோல்ஃப் சங்கம் வீராங்கனைகளின் உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அவை பின்வருமாறு:
1. வழக்கமான காலர் வைத்த பனியன் அனுமதி
2. பிளங்கிங் நெக்லைன்ஸ் அனுமதி கிடையாது.
3. ஸ்கார்ட் அல்லது ஷார்ட்ஸ் இல்லாத லெக்கிங்ஸ் அனுமதி இல்லை.
4. நீளமான ஸ்கர்ட், ஸ்கார்ட் மற்றும் ஷார்ட்ஸ் கீழ் பகுதி தெரியாத அளவிற்கு போதிய நீளம் இருக்க வேண்டும்.
5. போட்டிகள் தொடர்பான பார்ட்டிகளில் பங்கேற்கும்போது இந்த ஆடைகள்தான் அணிய வேண்டும்.
6. ஓட்டைகள் உள்ள ஜீன்ஸ் அணியக்கூடாது.
மேற்கண்ட கட்டுப்பாட்டை மீறும் பெண்களுக்கு 1000 டாலர் அபராதம் விதிக்கபப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our channel google news Youtube