தூத்துக்குடி தளமுத்துநகர் துறைமுக ஊழியர் வின்சென்ட் வீட்டில் 100 சவரன், 20 ஆயிரம் கொள்ளை!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 21 நாளைக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவது சற்றும் முடியாது, அனைவரும் வீட்டுக்குள் தான் முடங்கியிருக்கிறார்கள். 

இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் தளமுத்துநகர் பகுதியிலுள்ள பெரிய செல்வம் நகரில் தூத்துக்குடி துறைமுக ஊழியர் வின்சென்ட் வசித்து வருகிறார். இவரும் அவரது மனைவியும் இரவு வழக்கம் போல வீட்டின் அனைத்து அறைகளையும் பூட்டிவிட்டு தூங்க சென்றுள்ளனர்.

காலையில் வழக்கம் போல எழுந்து வீட்டு உள்ளே பார்த்த வின்சென்ட் அவர்களின் மனைவி ஜான்சி, பீரோல் திறக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்பு சந்தேகத்தில் பார்த்தபோது பீரோவிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை களவாடப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது குறித்து தூத்துக்குடி காவல் நிலையத்தில் இவர் அளித்த புகாரின் பேரில், வந்த காவலர்கள் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் வந்து சோதனை  செய்துள்ளனர். ஆனால், இதுவரை கொள்ளையடித்தவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். தற்போதுவரை விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டு உள்ளது.

author avatar
Rebekal