#BREAKING: வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து- உச்சநீதிமன்றம் மறுப்பு ..!

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்தனர். முறையான சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கு கடந்த நவம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் தீர்ப்பளித்துள்ளனர். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தது செல்லாதது. அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு ரத்து உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் & தமிழ்நாடு சட்டத்துறை, பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும்,  வழக்கின் அடுத்தகட்ட பிப்ரவரி 15,16 ஆகிய நாட்களில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தது.