அமெரிக்காவில் சடலங்களை அடக்கம் செய்ய தயார் செய்யப்படும் 1 லட்சம் சவ பைகள்!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற நிலையில், உலக அளவில் கொரோனா அதிகம் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில்,கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து, அமெரிக்க ராணுவத் தலைமையகம் பெண்டகன், சுமார் 1 லட்சம் சவப் பைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதுவரை அமெரிக்காயாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,15,000-ஐ எட்டியுள்ளதால், உயிரிழப்புகள் பன்மடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.