காங்கிரஸ் ஆட்சியை விட 1.5 மடங்கு அதிக வேலைவாய்ப்பு.! பிரதமர் மோடி பெருமிதம்.!

ரோஜ்கர் திட்டம் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு மத்திய அரசு துறைகளில் காலிப்பணியிடங்கள் தகுதி வாய்ந்த இளைஞர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.  இந்த வருட ரோஜ்கர் திட்டம் இந்தியா முழுக்க 47 இடங்களில் நடைப்பெற்றது.

இதில் சுமார் 1 லட்சத்திற்கும் மேலான இளைஞர்களுக்கு மத்திய அரசின்,  உயர்கல்வித்துறை, அணுசக்தி துறை, வருவாய்த்துறை. உள்த்துறை , பாதுகாப்புத்துறை, நிதி சேவைகள் துறை, குடும்பநல துறை, பழங்குடியினர் நலத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிகள் அளிக்கப்பட்டுள்ளது.

ரோஜ்கர் மேளா : 1 லட்சம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் பிரதமர் மோடி.!

இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்ற இளைஞர்களுக்கு பிரதமர் மோடி காணொளி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், கடினமாக உழைத்தால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முடியும் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் தற்போது அறிந்துள்ளனர்.

கடந்து 2014-ம் ஆண்டு முதல் இளைஞர்களை இந்திய அரசுடன் இணைத்து அவர்களை வளர்ச்சியில் பங்குதாரர்களாக மாற்ற முயற்சித்து வருகிறோம். முந்தைய அரசை விட (காங்கிரஸ்) 1.5 மடங்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம் என்றும் பிரதமர் மோடி இன்றைய உரையில் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment