துாத்துக்குடி மஞ்சல்நீர்காயல் ஊராட்சி பகுதியில் 1 குடம் தண்ணீர் 10 ரூபாய் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் கூறி உள்ள கோரிக்கை மனுவில் கூறியதாவது…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் மஞ்சள்நீர்காயல் ஊராட்சி பகுதியில் 2500 பேர் வசிக்கின்றோம். எங்கள் பகுதியில் விவசாயம் ,உப்பள தொழிலார்கள் பலர் வசிக்கின்றனர்.
எங்களுக்கு வாழவல்லான் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் வந்த குடி தண்ணீர் தற்போது நிறுத்தி உள்ளனர்.கடந்த 2 மாதமாக குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிப்பதற்கு 1 குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவள நிலை உருவாகி உள்ளது.ஏழை எளிய மக்கள் குடிப்பதற்கு 1 குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆகையால் பழைய காயல் குளத்தில் ஆழ்குழாய் அமைத்து மஞ்சல்நீர்காயல் ஊராட்சி பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட அந்த கோரிக்கை மனுவில் கூறி உள்ளனர். முன்னதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பூமயில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கி உள்ளனர்.

Leave a Comment