விருச்சக ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

நீங்கள் தற்போது ஏழரை சனியின் கடைசி பாகத்தில் இருக்கின்றீர்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரு அல்லது ராகு உங்களது ராசியில் நல்ல நிலை இருக்க மாட்டார்கள். மேலும் உங்களது விரைய ஸ்தானம் இந்த சாதகமற்ற சூழலால் அதிகம் பாதிக்கப் படலாம். இதனால் பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது மற்றும் வீட்டில் சுப காரியம் நிகழ்த்துவது போன்ற விடயங்களால் உங்களது செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய சூழலும் வாங்கலாம். முக்கியமாக நவம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019 உங்கள் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைப்பது சந்தேகமே. எனினும் மற்ற காலகட்டங்கள் உங்களுக்கு ஒரு கலவையான பலன்களை தரக் கூடும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment