வரலாற்றில் இன்று – சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது…!!

வரலாற்றில் இன்று – சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது…!!

Default Image

வரலாற்றில் இன்று – 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றொருவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல் டெலிபோன் கம்பனி சென்னை எர்ரபாலு செட்டி தெருவில் 1881ம் ஆண்டு ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வெறும் 93 பேர் மட்டுமே. இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள்.அந்த வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அனைவரும் ஆங்கிலேயர்கள்தான். அவ்வாறு உருவான தொலை பேசி நிலையத்தின் மூலம் முதலாவது தொலைபேசி அழைப்பானது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்த சென்னை மாகாண கவர்னருக்கும் பிராட்வேயிலிருந்த Beehive Foundry என்ற ஏற்றுமதி கம்பெனியின் முதலாளிக்கும் அந்த இணைப்பு கொடுக்கப்பட்டது. பேசப்பட்ட நாள் ஜனவரி 28, 1882. அதற்கு அடுத்த ஆண்டுதான் அதாவது 1883ம் ஆண்டு . இந்தியாவின் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளும் அஞ்சல் சேவைகளும் ஆங்கில கிழக்கிந்திய கம்பேணியால் ஒருங்கிணைக்கப்பட்டன.

Join our channel google news Youtube