`லவ்வர கிஸ் அடிக்காம வேற யார கிஸ் அடிக்கிறது’: வடசென்னை புரமோ வீடியோ….!!

`லவ்வர கிஸ் அடிக்காம வேற யார கிஸ் அடிக்கிறது’: வடசென்னை புரமோ வீடியோ….!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள படம் வட சென்னை. படம் 17-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டு புரமோ வீடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. வட சென்னையை கதைக்களமாக வைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷூடன் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் வெளியாக உள்ளது. படம் வருகின்ற 17-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திரையரங்குகளில் நேற்றிலிருந்து முன்பதி தொடங்கிய சில மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. படத்தினை தயாரிக்கும் வொண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புரமோஷன் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
அதில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *