மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு..! 2 பலி..!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் குண்டுவெடித்ததில் தொண்டர்கள் இருவர் பலியாகினர்.மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் மகரம்பூர் கிராமத்தில் ((Makarampur)) உள்ள அக்கட்சியின் அலுவலகத்தை, அக்கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் திறந்தனர். அப்போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 2 பேர் சம்பவ இடத்தியே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment