மேற்கு ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் போலி சிக‌ர‌ட் தொழிற்துறை..!

மேற்கு ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் போலி சிக‌ர‌ட் தொழிற்துறை..!

Default Image

 
நெத‌ர்லாந்தில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ போலி சிக‌ர‌ட்டுக‌ள் த‌யாரிக்கும் தொழிற்சாலைக‌ள் பிடிப‌ட்டுள்ள‌ன‌. இந்நாட்டில் விற்ப‌னையாகும் மொத்த‌ சிக‌ர‌ட்டுக‌ளில் 6% போலியான‌வை. இதனால் அர‌சுக்கு வ‌ருட‌மொன்றுக்கு 200 மில்லிய‌ன் யூரோக்க‌ள் வ‌ருமான‌ வ‌ரி இழ‌ப்பு ஏற்ப‌டுகின்ற‌து.
மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளில், சிக‌ர‌ட் மீதான‌ அர‌சு வ‌ரி அதிக‌ரித்துள்ள‌ ப‌டியால், ச‌ட்ட‌விரோதமாக‌ போலி‌ சிக‌ர‌ட் த‌யாரிப்ப‌து இலாப‌க‌ர‌மான‌ தொழிலாகி விட்டது. பிரித்தானியாவில் ஒரு மால்ப‌ரோ பாக்கெட் 11 யூரோ, நெத‌ர்லாந்தில் 7 யூரோ. போலி மால்ப‌ரோ 3 யூரோவுக்குள் கிடைக்கும். இத‌னால் ப‌ல‌ கடைக‌ளில் போலி சிக‌ர‌ட்டுக‌ள் விற்ப‌னையாகின்ற‌ன‌.

முன்பு இவ்வாறான‌ ச‌ட்ட‌விரோத‌ சிக‌ர‌ட் தொழிற்சாலைக‌ள் கிழ‌க்கு ஐரோப்பிய‌ நாடுக‌ளில் இய‌ங்கின‌. அங்கிருந்து மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளுக்கு க‌ட‌த்த‌ப் ப‌ட்டு வ‌ந்த‌து. க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் போல‌ந்தில் ம‌ட்டும் இவ்வாறான‌ 40 தொழிற்சாலைக‌ள் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌ன‌.
2013 ம் ஆண்டிலிருந்து கிழ‌க்கிரோப்பிய‌ நாடுக‌ளில் பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை அதிக‌ரித்துள்ள‌ ப‌டியால், த‌ற்போது அந்த‌த் தொழிற்சாலைகளை மேற்கைரோப்பிய‌ நாடுக‌ளுக்கு இட‌ம்மாற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.
Join our channel google news Youtube