பொருளாதாரத்தில் வேகம், வேலைவாய்ப்புகளில் மந்தம் :ஆய்வில் தகவல்..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடித்திருந்தாலும், வேலைவாய்ப்புகளை வழங்குவதில் மந்தநிலையே காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மேன் பவர் குரூப் (Man Power Group) என்ற அமைப்பு, 5 ஆயிரத்து 110 நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில், 16 சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிய ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வேலைவாய்ப்பை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் அமைப்பு சாரா தொழில்துறையின் நிலையும் மந்தமாகவே காணப்படுவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.7 என்ற குறியீட்டை எட்டி இருந்தாலும், வேலைவாய்ப்பு சந்தையில் அதன் தாக்கம் இதுவரை பிரதபலிக்கவில்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் இளைஞர்கள், படிப்பை முடித்து விட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வெளியில் வருவதையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment